/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலிவெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலி
வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலி
வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலி
வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் பலி
ADDED : ஜூன் 20, 2024 06:08 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, சாணாங்கொல்லையை சேர்ந்தவர் தருமன், 55; இவர் தனியார் பார்சல் சர்வீஸ் லாரியில் டிரைவராக பணி செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு காரிமங்கலத்திலிருந்து, வீட்டிற்கு ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்றார். பனங்காட்டூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, வேகத்தடை மீது ஏறியதில் தவறி விழுந்தபோது தலையில் படுகாயமடைந்து இறந்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளியை சேர்ந்தவர் சுராஜ், 26; இவரின் மாமன் மகன் சித்திக்பாஷா, 22; இருவரும் அப்பாச்சி பைக்கில் மத்துாரிலிருந்து அவர்களின் வீட்டிற்கு செல்லும்போது, புதியதாக அமைக்கப்பட்டு வரும் டோல்கெட் அருகில் முன்னால் சென்ற லாரியின் மீது மோதியதில், சுராஜ் படுகாயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த சித்திக்பாஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.