ADDED : ஜூன் 05, 2025 01:06 AM
மொரப்பூர், மொரப்பூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, தர்மபுரி செல்லும் சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
குட்டையாக நிற்கும் மழைநீரில் குப்பை, மண் சேர்ந்து சகதியாக மாறியதால், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இப்பகுதியை கடக்கும்போது, டூவீலரில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் மீது, சகதி தெளிக்கிறது. எனவே, சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க, போதிய வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கையும் எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், மொரப்பூர் பஸ் ஸ்டாண்ட், சிந்தல்பாடி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பை அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, குப்பையை அகற்ற பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.