/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி மாவட்ட அணி வெற்றி மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி மாவட்ட அணி வெற்றி
மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி மாவட்ட அணி வெற்றி
மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி மாவட்ட அணி வெற்றி
மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி மாவட்ட அணி வெற்றி
ADDED : செப் 03, 2025 01:36 AM
குளித்தலை, செப். 3
குளித்தலை அருகே நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில், திருச்சி மாவட்ட அணி வெற்றி பெற்றது.
குளித்தலை அடுத்த, பில்லுார் பஞ்சாயத்தில் உள்ள பெரியவீட்டுக்காரன்பட்டி ஊர் மக்கள் சார்பாக, மாநில அளவிலான, 64ம் ஆண்டு தொடர் சிறுவர் கபடி போட்டி நடந்தது. இங்குள்ள செம்மீன் விளையாட்டு திடலில், 45 கிலோ எடை பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான கபடி போட்டி நடந்தது. தோகைமலை மேற்கு ஒன்றிய தி.மு.க., துணை செயலர் பில்லுார் ராகவன் தலைமை வகித்தார். கரூர், திருச்சி, சேலம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 60 அணிகள் பங்கேற்றன.
இறுதியில் திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதுார் பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசாக, 5,000 ரூபாய் மற்றும் சுழல் கோப்பையை தட்டிச் சென்றனர். கரூர் மாவட்டம் என்.என்.பட்டி கார்த்திக் நினைவு கபடி அணியினருக்கு, இரண்டாம் பரிசாக, 3,000 ரூபாய் மற்றும் சுழல் கோப்பையை பெற்றனர். இதேபோல் மூன்றாவது பரிசாக, 2,000 ரூபாய் மற்றும் சுழல் கோப்பையை, கரூர் மாவட்டம் முத்தக்காப்பட்டி அம்மன் பாய்ஸ் கபடி குழுவினர் பெற்றனர். நான்காவது பரிசாக, 2,000 ரூபாய், சிறப்பு கோப்பையை கரூர் மாவட்டம் பெரியவீட்டுக்
காரன்பட்டி செம்மீன் கபடி கிளப் அணியினர் பெற்றனர். மேலும் சிறந்த அணிகள், சிறந்த வீரர்
களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.