Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை

ADDED : ஜூன் 20, 2025 01:24 AM


Google News
ஒகேனக்கல், ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு, விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஒகேனக்கல், ஊட்டமலை, நாடர் கொட்டாய் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது அவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, அங்குள்ள ஊட்டமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடுகின்றனர்.

அங்கு, இரவு நேரங்களில் டாக்டர் இல்லாமல், நர்சுகள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இரவு நேரங்களில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், வனப்பகுதியை தாண்டி, பென்னாகரம் வர வேண்டும் என்பதால், அங்கேயே சிகிச்சைக்கு செல்கின்றனர். அவ்வாறு, அங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும்போது, மின்தடை ஏற்பட்டால், நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு மின்தடை ஏற்படும் போது, டார்ச் லைட் மற்றும் மொபைல்போன் வெளிச்சத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டி உள்ளது. ஆகவே, ஊட்டமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டுமென, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us