ADDED : ஜூன் 09, 2025 03:10 AM
சூளகிரி: சூளகிரி தாலுகா வருவாய்த்துறை அலுவலர்கள், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், நல்லகானகொத்தப்பள்ளி அருகே வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த டிராக்-டரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்-லாமல், ஒரு யூனிட் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்-படைத்தனர். போலீசார், டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையா-ளரை தேடி வருகின்றனர்.