/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை வரவேற்க அணி திரள வேண்டும்முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை வரவேற்க அணி திரள வேண்டும்
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை வரவேற்க அணி திரள வேண்டும்
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை வரவேற்க அணி திரள வேண்டும்
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை வரவேற்க அணி திரள வேண்டும்
ADDED : ஜன 06, 2024 07:14 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரிக்கு வருகை தரும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை அணி திரண்டு வரவேற்க வேண்டுமென, மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கோவிந்தராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நாளை (7ம்தேதி) கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழச்சிகளில் பங்கேற்கிறார். நிர்வாகிகளுடன் லோக்சபா தேர்தல் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளார். நாளை காலை, 10:00 மணிக்கு கிருஷ்ணகிரி, சேலம் சாலை, ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள மீனாட்சி மஹாலில் நடக்கும் அ.தி.மு.க., உரிமை மீட்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அவருடன் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
கிருஷ்ணகிரி வருகை தரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் அணி திரண்டு வரவேற்பளிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.