ADDED : ஜன 13, 2024 03:44 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி அருகே சொப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ் மகன் திலக், 24.
கடந்த, 2022 ஜன., 1ல் நடந்த ஸ்ரீராம்சேனா ஓசூர் நகர செயலாளர் மோகன்பாபு, 25, கொலையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இவர், கடந்தாண்டு மே, 12ல், பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய, மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்த சசிக்குமார், 25, என்பவர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், திலக் கொலையில் சாட்சி சொல்ல கூடாது என, திலக்கின் தந்தை முருகே ைஷ நேற்று முன்தினம் மதியம், கலுகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் கம்பெனி அருகே வைத்து மிரட்டினார். அதற்கு முருகேஷ் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சசிக்குமார், முருகே ைஷ கையால் தாக்கி மிரட்டல் விடுத்தார்.முருகேஷ் கொடுத்த புகார்படி, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து, சசிக்குமாரை கைது செய்தனர்.