ADDED : ஜூன் 01, 2025 01:17 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தீர்த்தகிரிபட்டியிலுள்ள தொட்டில் அம்மன் திருவிழா, 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று தீர்த்தகிரிபட்டி தொட்டில் அம்மன் திருவிழா நேற்று துவங்கியது.
கப்பல்வாடி, கல்லத்துப்பட்டி, சக்கில்நத்தம், குட்டப்ப
நாயக்கனுார் மற்றும் தீர்த்தகிரிபட்டி தாய்கிராமங்கள் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி திருவிழாவை நடத்தினர். இதற்காக தொட்டில் அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டது.
தாய் கிராமங்களை சேர்ந்த பெண்கள், சீர்வரிசையோடு வந்து தொட்டில் அம்மனுக்கு பூஜை செய்தனர்.
நாதஸ்வர இன்னிசை திருப்பள்ளி எழுச்சி, தமிழ் வேதமந்திரங்கள் முழங்க, அம்மனுக்கு பிரதான ஹோம பூஜை நடந்தது. தொடர்ந்து தொட்டில் அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சியில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
இதில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.