/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரூ.31 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் காணொலியில் துவக்கி வைத்த முதல்வர்ரூ.31 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் காணொலியில் துவக்கி வைத்த முதல்வர்
ரூ.31 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் காணொலியில் துவக்கி வைத்த முதல்வர்
ரூ.31 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் காணொலியில் துவக்கி வைத்த முதல்வர்
ரூ.31 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் காணொலியில் துவக்கி வைத்த முதல்வர்
ADDED : பிப் 25, 2024 04:13 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேக்கொள் மற்றும் 123 இதர குடியிருப்புகளுக்கு, 31 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, எண்ணேக்கொள் பஞ்.,ல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நீரேற்று நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சரயு குத்து விளக்கேற்றி, நீரேற்ற பணிகளை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., செல்லக்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மணிமேகலை நாகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
3 புதிய கட்டடங்கள் திறப்பு
ஓசூர் தளி ஜங்ஷன் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், அப்பாவு நகர் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதற்கு போதிய இட வசதி இல்லாததால், தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், ஆவலப்பள்ளி அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 1.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் மற்றும் நேரு நகரில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில், 1.38 கோடியில், நகர்புற வீடற்றவர்களுக்கான புதிய கட்டடம் கட்டப்படுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையில் இருந்தவாறு, முதல்வர் ஸ்டாலின் காணொலியில் கட்டடங்களை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அப்பாவு நகர் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கமிஷனர் சினேகா ஆகியோர், குத்துவிளக்கேற்றினர். வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாநகர நல அலுவலர் பிரபாகரன், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் நாகராஜ், மோசின்தாஜ், லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.