/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நல்லாசிரியர் விருதுக்கு பெற்ற தொகையை பள்ளி வளர்ச்சிக்கு வழங்கிய ஆசிரியர் நல்லாசிரியர் விருதுக்கு பெற்ற தொகையை பள்ளி வளர்ச்சிக்கு வழங்கிய ஆசிரியர்
நல்லாசிரியர் விருதுக்கு பெற்ற தொகையை பள்ளி வளர்ச்சிக்கு வழங்கிய ஆசிரியர்
நல்லாசிரியர் விருதுக்கு பெற்ற தொகையை பள்ளி வளர்ச்சிக்கு வழங்கிய ஆசிரியர்
நல்லாசிரியர் விருதுக்கு பெற்ற தொகையை பள்ளி வளர்ச்சிக்கு வழங்கிய ஆசிரியர்
ADDED : செப் 13, 2025 01:07 AM
ஏரியூர், பென்னாகரம் அருகே, நல்லாசிரியர் விருதுக்கு வழங்கிய பரிசு தொகையை, ஆசிரியர் தான் பணிபுரியும் பள்ளியின் வளர்ச்சிக்கு வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள, இராமகொண்டஹள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு, 380 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் சுப்ரமணிக்கு, தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கியது. ஆசிரியரை பாராட்டியும், காமராஜர் விருது மற்றும் 100 சதவீதம் பள்ளி தேர்ச்சி என முப்பெரும் விழா நேற்று
நடந்தது.
தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் பெருமாள் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை
வகித்தனர்.
இதில், நல்லாசிரியர் விருது பெற்ற சுப்ரமணி, தமிழக அரசு வழங்கிய பரிசு தொகையான, 10,000 ரூபாயுடன், 501 ரூபாய் சேர்த்து மொத்தமாக, 10,501 ரூபாயை பள்ளியின் வளர்ச்சிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரிடம் வழங்கினார். அறிவியல் ஆசிரியர் மாராகவுண்டர் நன்றி கூறினார்.