/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ யு.பி.எஸ்.சி., தேர்வில் மாணவன் வெற்றி தி.மு.க.,-அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் மாணவன் வெற்றி தி.மு.க.,-அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு
யு.பி.எஸ்.சி., தேர்வில் மாணவன் வெற்றி தி.மு.க.,-அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு
யு.பி.எஸ்.சி., தேர்வில் மாணவன் வெற்றி தி.மு.க.,-அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு
யு.பி.எஸ்.சி., தேர்வில் மாணவன் வெற்றி தி.மு.க.,-அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு
ADDED : மே 24, 2025 01:21 AM
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர், யு.பி.எஸ்.சி., போட்டி தேர்வெழுதி, 138வது இடம் பிடித்து, ஐ.எப்.எஸ்., ஆக தேர்ச்சி பெற்றுள்ளார். அவரை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், சூளகிரி தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் துணைத்
தலைவர் ஷேக் ரஷீத் உட்பட பலர் உடன் இருந்தனர்.
அதேபோல், வேப்பனஹள்ளி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி, மாணவன் சந்தோஷ்குமாரை சந்தித்து, சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், சூளகிரி மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ், வேப்பனஹள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.