Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

ADDED : ஜூன் 13, 2025 01:17 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைபயிற்சி அளிக்கப்படுகிறது. காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை இயங்கும் இப்பள்ளியில், 13 வயது முதல், 25 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம், 3 ஆண்டுகள். பயிற்சி முடிவில், தேர்வு நடத்தி, அரசுத்தேர்வுகள் இயக்குனரால் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு, 350 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு டவுன் பஸ்சில் இலவச பயணச்சலுகை உண்டு.

இப்பள்ளியில் சேர விரும்புவோர், 'தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், திருமலை நகர், ராமாபுரம், கிருஷ்ணகிரி' என்ற முகவரியிலும், 04343 234001 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us