/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரியில் 3ம் கட்டமாக 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் கிருஷ்ணகிரியில் 3ம் கட்டமாக 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
கிருஷ்ணகிரியில் 3ம் கட்டமாக 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
கிருஷ்ணகிரியில் 3ம் கட்டமாக 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
கிருஷ்ணகிரியில் 3ம் கட்டமாக 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : செப் 15, 2025 01:11 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கடந்த ஜூலை, 15ல் துவங்கியது. கடைகோடி மக்களுக்கும், அரசு துறைகளின் சேவைகள், திட்டங்கள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று சேரும் வகையில், இத்திட்டம் தமிழக முதல்வரால் துவங்கப்பட்டுள்ளது.
மாவட்ட நகர் பகுதிகளில், 55 முகாம்கள், ஊரக பகுதிகளில், 173 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல் மற்றும் 2ம் கட்டமாக மொத்தம், 150 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில் மகளிர் உரிமைத்தொகை பெற, 52,028 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, 29,843 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நாளை (செப்.16) 3ம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்கிறது. முகாம் நடக்கும் பகுதி மக்கள், மனுக்களை வழங்கி பயனடையலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.