லாரி மீது கார் மோதி ஆறு பேர் காயம்
லாரி மீது கார் மோதி ஆறு பேர் காயம்
லாரி மீது கார் மோதி ஆறு பேர் காயம்
ADDED : ஜூன் 07, 2024 12:23 AM
கிருஷ்ணகிரி : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பல்லுாரை சேர்ந்தவர் பாலாஜி, 27.
இவர் கடந்த, 2ல், தன் உறவினர்களுடன், ஸ்விப்ட் காரில் சென்றுள்ளார். பர்கூர் அடுத்த பாகிமானுார் அருகே கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில், காரில் பயணித்த திருவண்ணாமலை மாவட்டம் கீழுரை சேர்ந்த விக்ரம், 34, ஷர்மி, 11, அயிரா, 11, எலிஷா சார்ஜி, 25, சதீஷ்குமார், 31, பேரிகாசெரி, 13 ஆகிய ஆறு பேர் காயம் அடைந்தனர். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.