/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வாரச்சந்தையில் ஒதுக்கப்படாத கடைகள் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்த வியாபாரிகள்வாரச்சந்தையில் ஒதுக்கப்படாத கடைகள் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்த வியாபாரிகள்
வாரச்சந்தையில் ஒதுக்கப்படாத கடைகள் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்த வியாபாரிகள்
வாரச்சந்தையில் ஒதுக்கப்படாத கடைகள் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்த வியாபாரிகள்
வாரச்சந்தையில் ஒதுக்கப்படாத கடைகள் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்த வியாபாரிகள்
ADDED : ஜூன் 19, 2024 10:43 AM
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி வாரச்சந்தையில் முறையாக கடைகள் ஒதுக்கப்படாததால், பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வாரச்சந்தை பகுதியில், கடந்த, 2017 ல், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் கட்ட அடிக்கல் நடப்பட்டது. அதன் பிறகு, 2019 பணிகள் முடிக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. அதன் பின், சாலை இணைப்பு மற்றும் மழைநீர் கால்வாய் பணிகளுக்காக, 1.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் முடிக்கப்பட்டு நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், நல்லம்பள்ளி வாரச்சந்தை, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன. அதன் பிறகு, சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கடைகள் ஒதுக்கப்படாததால், சிறு கடை வியாபாரிகள் வேறு வழியின்றி, சாலையோரம் மற்றும் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.
மேலும், வாரச்சந்தை நடக்கும் செவ்வாய்க்கிழமை நாட்களில் பஸ் ஸ்டாண்ட் உள்ளே பஸ்கள் செல்ல முடியாத அளவிற்கு, வழிப்பாதையில் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். எனவே, வாரச்சந்தை மேம்பாடு செய்யப்பட்ட இடங்களில் காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.