/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ துரத்திய தேனீக்களால் தொட்டி நீரில் மூழ்கி தப்பித்த செக்யூரிட்டி துரத்திய தேனீக்களால் தொட்டி நீரில் மூழ்கி தப்பித்த செக்யூரிட்டி
துரத்திய தேனீக்களால் தொட்டி நீரில் மூழ்கி தப்பித்த செக்யூரிட்டி
துரத்திய தேனீக்களால் தொட்டி நீரில் மூழ்கி தப்பித்த செக்யூரிட்டி
துரத்திய தேனீக்களால் தொட்டி நீரில் மூழ்கி தப்பித்த செக்யூரிட்டி
ADDED : மே 14, 2025 01:51 AM
ஓசூர், ஓசூர், பாரதியார் நகரை சேர்ந்தவர் சத்தியசீலன், 32. செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை எழில் நகரிலுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீட்டின் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் உள்ளதா என பார்த்துள்ளார். அப்போது, அங்கிருந்த மரத்தில் இருந்த தேன் கூடு கலைந்து,
அதிலிருந்து பறந்த தேனீக்கள், சத்தியசீலனை கொட்டின.வலியால் துடித்த அவர், ஒரு கட்டத்தில் தப்பிக்க வழியின்றி சின்டெக்ஸ் தொட்டிக்குள் இறங்கி, தண்ணீரீல் மூழ்கினார். சில நிமிடத்தில் தேனீக்கள் கலைந்து சென்ற பின், தொட்டியில் இருந்து வெளியே வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.