ADDED : மே 12, 2025 02:35 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், நுங்கு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
கத்திரி வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், இயற்கையின் பக்கம் மக்கள் திரும்பி உள்ளனர். நுங்கு சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறைகிறது. நீர்ச்சத்தை அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்குகிறது.இதனால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். ஒரு நுங்கு, 10 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. இதனால் பனைத் தொழிலா-ளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.