/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போச்சம்பள்ளியில் இ -- நாம் முறையில் ரூ.1.17 லட்சத்துக்கு கொப்பரை விற்பனைபோச்சம்பள்ளியில் இ -- நாம் முறையில் ரூ.1.17 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
போச்சம்பள்ளியில் இ -- நாம் முறையில் ரூ.1.17 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
போச்சம்பள்ளியில் இ -- நாம் முறையில் ரூ.1.17 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
போச்சம்பள்ளியில் இ -- நாம் முறையில் ரூ.1.17 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ADDED : ஜன 03, 2024 12:26 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ - -நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதில், 1,709 கிலோ கொப்பரை தேங்காய்கள், ஒரு கிலோ, 82- ரூபாய்க்கு என, மொத்தம், 1.17 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறியதாவது:
இங்கு, தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ--நாம்) முறையில், விவசாய விளைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இ--நாம் முறையில் நடந்த ஏலத்தில், கொப்பரை தேங்காய்கள் நல்ல விலைக்கு போனது. விற்பனை செய்யப்பட்ட தொகை, உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. எனவே, விவசாயிகள் தங்களது கொப்பரை தேங்காய், பருத்தி, காராமணி, கொள்ளு உள்ளிட்ட விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ - -நாம் முறையில் விற்பனை செய்து, கூடுதல் வருவாய் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 97519 78007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.