/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரூ. 2.50 கோடி மதிப்பில் அறிவு சார் மையம் திறப்புரூ. 2.50 கோடி மதிப்பில் அறிவு சார் மையம் திறப்பு
ரூ. 2.50 கோடி மதிப்பில் அறிவு சார் மையம் திறப்பு
ரூ. 2.50 கோடி மதிப்பில் அறிவு சார் மையம் திறப்பு
ரூ. 2.50 கோடி மதிப்பில் அறிவு சார் மையம் திறப்பு
ADDED : ஜன 06, 2024 07:14 AM
தர்மபுரி : தர்மபுரியில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நுாலக மையம் திறக்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, பல்வேறு மாவட்டங்களில் முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். தர்மபுரி நகராட்சி சந்தை பேட்டையில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நுாலகம், அறிவு சார் மையத்தை, காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். தர்மபுரி கலெக்டர் சாந்தி, மையத்தில் குத்து விளக்கேற்றி வைத்தார்.தர்மபுரி எம்.பி., செந்தில்குமார், பென்னாகரம் பா.ம.க - எம்.எல்.ஏ., ஜி.கே.மணி, தர்மபுரி பா.ம.க - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், தி.மு.க., மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகராட்சி சேர்மன் லட்சுமி மாது, நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.