/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஏ.டி.எம்., இயந்திரங்களில் பசை தடவி பணம் திருட்டு; ஹரியானா கொள்ளையர்கள் சிக்கினர் ஏ.டி.எம்., இயந்திரங்களில் பசை தடவி பணம் திருட்டு; ஹரியானா கொள்ளையர்கள் சிக்கினர்
ஏ.டி.எம்., இயந்திரங்களில் பசை தடவி பணம் திருட்டு; ஹரியானா கொள்ளையர்கள் சிக்கினர்
ஏ.டி.எம்., இயந்திரங்களில் பசை தடவி பணம் திருட்டு; ஹரியானா கொள்ளையர்கள் சிக்கினர்
ஏ.டி.எம்., இயந்திரங்களில் பசை தடவி பணம் திருட்டு; ஹரியானா கொள்ளையர்கள் சிக்கினர்
ADDED : செப் 16, 2025 12:37 AM
ஓசூர்; ஓசூரில், ஏ.டி.எம்., இயந்திரங்களில் பசை தடவி பணம் திருடிய, ஹரியானா மாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேர் வீதியில், 'இந்தியா ஒன்' என்ற தனியார், ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று காலை பழுதான ஏ.டி.எம்., இயந்திரத்தை சரிசெய்ய பராமரிப்பாளர்கள் வந்தனர்.
அவர்கள், அம்மையத்திலிருந்த, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது, இரு வாலிபர்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பசையை தடவி, நுாதன முறையில் பணம் திருடியது தெரிந்தது.
இந்த வீடியோ காட்சிகளை, ஓசூரை சுற்றியுள்ள அனைத்து ஏ.டி.எம்., மைய பராமரிப்பாளர்களுக்கும், 'வாட்ஸாப்'பில் அனுப்பினர்.
இந்நிலையில், ஓசூர், ஏரித்தெருவிலுள்ள ஏ.டி.எம்., மையத்தை கண்காணிக்கும் முரளி என்பவர், நேற்று காலை, பணியில் ஈடுபட்டிருந்த போது, வீடியோவில் பார்த்த வாலிபர்களை கண்டுள்ளார்.
அவர்களை பின் தொடர்ந்த போது, ஏ.டி.எம்., உள்ளே சென்றனர். உடனடியாக அவர்களை ஏ.டி.எம்., மையத்திற்குள் வைத்து, ஷட்டரை இறக்கி, வெளியே பூட்டி, ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து மூவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தாகீர், 31, முகமது சாத், 20, ஹசம், 28, என, தெரிந்தது.
வடமாநிலங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் வரும் அவர்கள், ஏ.டி.எம்., மையங்களில், இயந்திரத்தின் பணம் வரும் பகுதியில் பசை தடவி, பணம் வரும் பகுதி திறக்காதபடி செய்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் பணம் வராமல் ஏமாந்து சென்ற பின், இவர்கள் உள்ளே புகுந்து பசையை சுரண்டி, இயந்திரத்தை திறந்து பணத்தை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த வகையில் பல ஏ.டி.எம்.,களில் கைவரிசை காட்டியுள்ளனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.