/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அஞ்செட்டியில் சாலை மறியல் ¼போராட்டம் அஞ்செட்டியில் சாலை மறியல் ¼போராட்டம்
அஞ்செட்டியில் சாலை மறியல் ¼போராட்டம்
அஞ்செட்டியில் சாலை மறியல் ¼போராட்டம்
அஞ்செட்டியில் சாலை மறியல் ¼போராட்டம்
ADDED : செப் 17, 2025 01:41 AM
அஞ்செட்டி, அஞ்செட்டியில் உள்ள நாட்றாம்பாளையம் சாலையோரம், வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்கின்றனர். இவற்றை அகற்ற கூறி கடந்த, 15 நாட்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அஞ்செட்டி போலீசார் பாதுகாப்புடன், நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முயன்றனர். இதை கண்டித்து, இ.கம்யூ., மற்றும் சாலையோர வியாபாரிகள் சார்பில், அஞ்செட்டியில் உள்ள நுாலகம் அருகே, 60க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அஞ்செட்டி தாசில்தார் கோகுல் நாத், இன்ஸ்பெக்டர் சுமித்ரா, நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் நவீன்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாட்களில் அமைதி கூட்டம் நடத்தி முடிவு எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.