/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/விவசாய நிலம் வழியாக கெயில் குழாய் பதிக்க எதிர்ப்புவிவசாய நிலம் வழியாக கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு
விவசாய நிலம் வழியாக கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு
விவசாய நிலம் வழியாக கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு
விவசாய நிலம் வழியாக கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு
ADDED : ஜூன் 12, 2024 06:55 AM
கிருஷ்ணகிரி : கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், கேரள மாநிலம்,
கொச்சி, கோட்ட நாடு முதல் தமிழ்நாட்டின், கோவை ஈரோடு, நாமக்கல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட, 9 மாவட்டங்கள் வழியாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு, 294 கி.மீ., தூரத்திற்கு அமைக்கும் பணி நடக்கிறது.
இதில், ஓசூர் வட்டம், எடையநல்லூர் சூதாளம், எடப்பள்ளி
பகுதிகளில், விளைநிலங்கள் வழியாக, கெயில் எரிவாயு குழாய்
பதிக்க, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் வட்ட தலைவர் திம்மாரெட்டி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் பேசுகையில், “கெயில் நிறுவனம் தமிழகத்திலுள்ள விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராடினால், அவர்களை போலீசாரை வைத்து அப்புறப்படுத்துகின்றனர்.
மற்ற மாநிலங்களில் சாலையோரம் கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களை பறிப்பது ஏன் என புரியவில்லை. சாலையோரம் எரிவாயு குழாய்களை பதிக்கவில்லையென்றால், எங்கள் போராட்டம் தொடரும்,” என்றார்.தொடர்ந்து, ஓசூர் பகுதியில் கெயில் எரிவாயு குழாய்களை
சாலையோரம் பதிக்க வலியுறுத்தி சங்கத்தினர், கிருஷ்ணகிரி கலெக்டர் சரயுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். விவசாய சங்க மாநில துணைத்தலைவர் டில்லிபாபு, மாநில துணை செயலாளர்கள் பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட, 100-க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.