ADDED : ஜூலை 16, 2024 01:58 AM
ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு காப்புக்காட்டிலிருந்து நேற்று அதி-காலை உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறிய, 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான், வழித்தவறி, ஓசூர் நகருக்குள் வந்தது.
ராயக்கோட்டை சாலையில், மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் அதிகாலை, 5:30 மணிக்கு சென்றது. அங்கிருந்த நாய் விரட்டி கடித்ததில், மான் காயமடைந்-தது. ஓசூர் வனத்துறையினர் வந்து, காலை, 7:30 மணிக்கு வலையை போட்டு மானை பிடித்தனர். மானிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து, சானமாவு காப்புக்காட்டில் விடப்பட்டது.