/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வாடகை, வரி செலுத்தாத கடைகள், மண்டபத்திற்கு 'சீல்'வாடகை, வரி செலுத்தாத கடைகள், மண்டபத்திற்கு 'சீல்'
வாடகை, வரி செலுத்தாத கடைகள், மண்டபத்திற்கு 'சீல்'
வாடகை, வரி செலுத்தாத கடைகள், மண்டபத்திற்கு 'சீல்'
வாடகை, வரி செலுத்தாத கடைகள், மண்டபத்திற்கு 'சீல்'
ADDED : ஜன 25, 2024 10:02 AM

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில் வாடகை, வரி கட்டாமல் இருந்த, கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் 'சீல்' வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், ஆயிரக்கணக்கான கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 11, 24, 25, மற்றும் 26 வது வார்டுகளுக்கு உட்பட்ட பாகலுார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல கடைகள் வாடகை மற்றும் வரி செலுத்தாமல் இருந்தன. இது குறித்து, மாநகராட்சி சார்பில் பலமுறை, 'நோட்டீஸ்' அனுப்பியும் பணம் செலுத்தவில்லை.
இதையடுத்து நேற்று, ஓசூர் மாநகராட்சி உதவி கமிஷனர் டிட்டோ தலைமையிலான, மாநகராட்சி அலுவலர்கள், அந்த வார்டுகளிலுள்ள, 6 கடைகள் மற்றும் ஒரு திருமண மண்டபத்திற்கு, 'சீல்' வைத்தனர். மேலும் வாடகை, ஆண்டு வரி கட்டாமல் இருந்தவர் களிடம், நிலுவை தொகையை வசூல் செய்தனர். தொடர்ந்து மற்ற வார்டுகளிலும் நேரடியாக வரிவசூல் செய்ய உள்ளதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.