/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தென்பெண்ணை ஆற்றில் சேதமான பழமையான தரைப்பாலம் அகற்றம் தென்பெண்ணை ஆற்றில் சேதமான பழமையான தரைப்பாலம் அகற்றம்
தென்பெண்ணை ஆற்றில் சேதமான பழமையான தரைப்பாலம் அகற்றம்
தென்பெண்ணை ஆற்றில் சேதமான பழமையான தரைப்பாலம் அகற்றம்
தென்பெண்ணை ஆற்றில் சேதமான பழமையான தரைப்பாலம் அகற்றம்
ADDED : செப் 21, 2025 01:06 AM
போச்சம்பள்ளி :கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் சேதமாகி இருந்தது. இதனால், 50 ஆண்டுகளுக்கு முன், புதிய பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சேதமான பாலத்தை அகற்றாமல் அப்படியே இருந்ததால், மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில், புனித நீராடவும், ஈமச்சடங்குகள் செய்யவும் வரும் பொதுமக்கள், பழுதான பாலத்தின் மீதிருந்து ஆற்றில் குளிக்கும்போது, அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து பலதரப்பில் இருந்தும் மக்கள், சேதமான தரைப்பாலத்தை அகற்ற கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின்படி, ஊத்தங்கரை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சரவணன், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா முன்னிலையில், நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம், பழுதான தரைப்பாலத்தை அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பணி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.