/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை: அ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா போராட்டம்ஓசூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை: அ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா போராட்டம்
ஓசூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை: அ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா போராட்டம்
ஓசூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை: அ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா போராட்டம்
ஓசூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை: அ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா போராட்டம்
ADDED : பிப் 24, 2024 04:48 PM
ஓசூர் : ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில், அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை தலைதுாக்கி விட்டதாக, கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
வார்டில் நடக்கும் பணி குறித்து தகவல் தெரிவிப்பதில்லை என, அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கூட்டரங்கில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், மேயர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதிலளித்த விபரம்:மேயர்: கடந்தாண்டு மழை பொய்த்து விட்டதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, 25க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுள்ளன. மாநகராட்சிக்கு கூடுதலாக, 5 எம்.எல்.டி., தண்ணீர் வேண்டும் என, குடிநீர் வடிகால் வாரியத்திடம் கேட்டுள்ளோம். தெரு விளக்குகளை அமைக்க டெண்டர் எடுத்தவர்கள் முறையாக பணி செய்வதில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி டெண்டரை முடிந்தால் ரத்து செய்யப்படும்.கமிஷனர்: புதிய மற்றும் குறைந்த வரி விதிக்கப்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டு, 6 கோடி அளவிற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., கவுன்சிலர் கலாவதி சந்திரன், தனது வார்டில் நடக்கும் பணிகள் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை என கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குரல் கொடுத்தனர்.தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன்: பஸ் ஸ்டாண்ட் காம்பவுண்டர் சுவரை இடித்து, வண்ணார் தெருவிற்கு வழிப்பாதை ஏற்படுத்துவது குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து, சட்ட ஆலோசகர் ஆலோசனை பெற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என கேட்டிருந்தேன். ஆனால், சட்ட ஆலோசனை பெற்றதை கூட தெரிவிக்காமல், காம்பவுண்ட் சுவரை இடித்து விட்டீர்கள். சிறிய கடைகள் வரி பாக்கி செலுத்தவில்லை என கூறி சீல் வைக்கும் அதிகாரிகள், பல லட்சம் பாக்கி வைத்துள்ள திருமண மண்டபத்திற்கு சீல் வைக்காதது ஏன். தி.மு.க., சென்னீரப்பா: நிலைக்குழு கூட்டங்களை நடத்த மூன்று முறை கடிதம் கொடுத்தும் நடத்தவில்லை. சிறப்பு முகாம் நடத்தி வரி வசூல் செய்ய வேண்டும்.அ.தி.மு.க., ஜெயப்பிரகாஷ்: மாநகராட்சி வளாகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு சிலை வைக்க வேண்டும்.துணை மேயர் ஆனந்தய்யா: பாகலுார் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனது சொந்த செலவில் சீரமைக்க தயாராக உள்ளேன். குடிநீர் பிரச்னை தலைதுாக்கியுள்ளதால், புதிய போர்வெல்கள் அமைத்து, உடனடியாக மின் இணைப்பு கொடுத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சனை குறித்து மேலும் பல கவுன்சிலர்கள் பேசினர்.