ஓசூர், ஜூன் 6-ஓசூர் அருகே குமுதேப்பள்ளி பகுதியில், நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல் கனமழை பெய்ய துவங்கியது.
நேற்றிரவு, 7:00 மணிக்கு மேல், ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான கனமழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.