/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்திவைப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்திவைப்பு
மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்திவைப்பு
மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்திவைப்பு
மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 11, 2025 01:42 AM
அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கேரட்டி கிராமத்தில் இன்று (ஜூன் 11) காலை, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்க இருந்தது.
ஆனால், நிர்வாக காரணத்தினால் முகாம் ஒத்தி வைக்கப்பட்டு வரும், 13ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கும்.
இம்முகாமில், மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்று, தங்கள் துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்க உள்ளனர். முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும் என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.