/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்
ADDED : செப் 12, 2025 01:08 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை, 13ல் நடக்கிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்திலுள்ள குறைகளை களையவும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அதை தீர்த்து வைக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வரும், 13 (சனிக்கிழமை) பொது வினியோக திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் கூட்டம், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி தாலுகாவில் பாலிகானுார், பர்கூரில் ஐ.கொந்தம், போச்சம்பள்ளியில் ஜிம்மாண்டியூர், ஊத்தங்கரையில் கஞ்சனுார், ஓசூரில் கொளதாசபுரம், சூளகிரியில் அயர்னப்பள்ளி, தேன்கனிக்கோட்டையில் சாத்தனுார், அஞ்செட்டியில் கரடிக்கல் என, 8 இடங்களில் இந்த குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் பொதுமக்கள், தங்களின் குறைகளை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.