/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
ADDED : ஜன 07, 2024 10:46 AM
ஓசூர்: ஓசூரில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் நர்மதாதேவி தலைமை வகித்தார். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், பிளஸ் 1 படிக்கும், 303 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
அப்போது, இப்பள்ளியில் மொத்தம், 1,840 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருவதால், இப்பள்ளியை இரண்டாக பிரித்து, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனியாக துவங்க வேண்டும். இப்பள்ளி வரை அரசு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., பிரகாஷ், அமைச்சர்களிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, நகரமைப்பு குழு தலைவர் அசோகா, கவுன்சிலர் நாகராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தான்யா உட்பட பலர் பங்கேற்றனர்.