/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 3 நாள் 'ஸ்டிரைக்' முடிவுக்கு வந்ததையடுத்து ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கம் 3 நாள் 'ஸ்டிரைக்' முடிவுக்கு வந்ததையடுத்து ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கம்
3 நாள் 'ஸ்டிரைக்' முடிவுக்கு வந்ததையடுத்து ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கம்
3 நாள் 'ஸ்டிரைக்' முடிவுக்கு வந்ததையடுத்து ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கம்
3 நாள் 'ஸ்டிரைக்' முடிவுக்கு வந்ததையடுத்து ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கம்
ADDED : செப் 11, 2025 01:18 AM
ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் புதியதாக, 4 பேருக்கு பரிசல் ஓட்டுனர் உரிமம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், புதியதாக பரிசல் ஓட்டுனர் உரிமம் வழங்கக்கூடாது. சமையல் செய்யும் இடத்தில் துாய்மையான குடிநீர் மற்றும் தெருவிளக்கு அமைத்துத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பரிசல் இயக்க, பரிசல் ஓட்டிகள் மறுத்து விட்டனர்.
அவர்களிடம் நேற்று முன்தினம் மாலை, பென்னாகரம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், தாசில்தார் சண்முகசுந்தரம், பி.டி.ஓ., சத்திவேல், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதியதாக, 4 பேருக்கு பரிசல் ஓட்டுனர் உரிமம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. அதை எதுவும் செய்ய முடியாது. இனி புதியதாக யாருக்கும் உரிமம் வழங்கப்பட மாட்டாது. சமையல் செய்யும் இடத்தில் தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நேற்று காலை முதல், காவிரியாற்றில் பரிசல் இயக்கப்பட்டது.