ADDED : ஜூன் 22, 2025 12:59 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் நாகராஜன், முருகேசன் மற்றும் போலீசார், பஞ்சாட்சிபுரம் பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த ஹூண்டாய் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 480 கர்நாடகா மாநில மதுபான பாக்கெட், 24 பீர் பாட்டில்கள் இருந்தன.
அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய, கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது. இதனால் காரை ஓட்டி வந்த தண்டரையை சேர்ந்த ஜெயசிம்மா, 32, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபானங்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.