ADDED : ஜூன் 18, 2025 01:26 AM
சூளகிரி, சூளகிரி
வட்டார வேளாண் துறை சார்பில், அங்கொண்டப்பள்ளி பஞ்., உட்பட்ட
எட்டிப்பள்ளி குட்டா மற்றும் சென்னப்பள்ளி பஞ்., உட்பட்ட
பேடப்பள்ளியில், உழவரை தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்ட சிறப்பு
முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை
வகித்தார். துணை வேளாண் அலுவலர் பழனி, உதவி தோட்டக்கலை அலுவலர்
புத்தன், வேளாண் பொறியியல் துறை அலுவலர் சங்கீதா, கால்நடை
பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் மதுபிரியா, கூட்டுறவுத்துறை
சார்பதிவாளர் ஜோயல், உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வி,
மீன்வளத்துறை கண்காணிப்பாளர் பைரீசன் பங்கேற்று, பல்வேறு மானிய
திட்டங்கள், தொழில்நுட்பங்கள், சிறப்பு முகாமின் நோக்கம் குறித்து,
விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.