/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்கள் கூட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்கள் கூட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்கள் கூட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்கள் கூட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்கள் கூட்டம்
ADDED : செப் 24, 2025 01:24 AM
கிருஷ்ணகிரி :தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வட்டார பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் ஹென்றி பவுல் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மரியசாந்தி, செயற்குழு உறுப்பினர் இசபெல்லா முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்றார்.
கூட்டத்தில் கடந்த, 14ல், கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், வரலாற்று புத்தகத்தை பெற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. சட்டசபையில், தமிழக முதல்வர், முக்கியத்துவம் வாய்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட மயிலாடும்பாறை அகழாய்வு முடிவை அறிவித்தது இதுவே முதல் முறை. இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழகத்தில் இருந்துதான் தொடங்கும் என கூறியது, இம்மாவட்ட மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கண்டறிந்து, பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் பரிந்துரைத்த சென்னானுார் அகழாய்வுக்கு ஆணை வழங்கியதற்கு நன்றி.
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கண்டறிந்த ஏறுதழுவுதல், ஆநிரை மீட்டல், அலங்காநல்லுார் ஏறுதழுவுதல் ஆகிய, 3 நடுகற்கல்களை கலைஞர் நுாற்றாண்டு அரங்கில் வைத்து உலகறியச் செய்தமைக்கு நன்றி. இதற்கு காரணமான தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, வரலாற்றுக் கதிரவன் என்ற பட்டம் அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சாதிக்உசேன் நன்றி கூறினார்.