ADDED : ஜன 29, 2024 11:08 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஆடு, மாடு, கோழி மற்றும் உணவு தானியங்களான அவரை, துவரை உள்ளிட்ட பயறு வகைகளை அதிகளவில் வியாபாரிகள் வாங்கிச் செல்வர். அதேபோல், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள குடும்ப பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்வர். பரப்பரப்பாக காணப்படும் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நேற்று பொருட்களை வாங்க ஆளின்றி வெறிச்சோடியது.
இது குறித்து கடை வியாபாரி சின்னசாமி கூறுகையில், ''கடந்த வாரம் பொங்கல் பண்டிகை முடிந்தது. தற்போது கிராமங்களில் சிறு, சிறு வியாபாரிகள் மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகளை ஒலி
பெருக்கி மூலம் விளம்பரம் செய்து விற்று வருகின்றனர். இதனால் வாரச் சந்தைக்கு பொருட்கள் வாங்க மக்கள் வாராமல் உள்ளதால், சந்தை வெறிச்சோடி உள்ளது,'' என்றார்.