/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 1,006 ஓட்டுச்சாவடிகளில் இன்று உறுதிமொழி ஏற்பு 1,006 ஓட்டுச்சாவடிகளில் இன்று உறுதிமொழி ஏற்பு
1,006 ஓட்டுச்சாவடிகளில் இன்று உறுதிமொழி ஏற்பு
1,006 ஓட்டுச்சாவடிகளில் இன்று உறுதிமொழி ஏற்பு
1,006 ஓட்டுச்சாவடிகளில் இன்று உறுதிமொழி ஏற்பு
ADDED : செப் 15, 2025 01:15 AM
ஓசூர்:ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், 'தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம்' என்ற உறுதிமொழி இன்று ஏற்கப்பட உள்ளதாக, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தெரிவித்தார்.
ஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், நேற்று மாலை நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஓசூர், தளி, வேப்பனஹள்ளி ஆகிய, 3 சட்டசபை தொகுதிகளில், 3.78 லட்சம் பேர், 'ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்' மூலம், தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று (செப்.15) அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, 3 சட்டசபை தொகுதியில் உள்ள, 1,006 ஓட்டுச்சாவடிகளில், 'தமிழகத்தை தலை குனியை விட மாட்டேன்' என்ற தலைப்பில், உறுதிமொழி ஏற்க உள்ளோம். இதில் கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள குடும்பங்கள் பங்கேற்க உள்ளன. வரும், 20 அல்லது, 21ம் தேதியில், 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான கூட்டங்கள் நடக்க உள்ளன.
கிருஷ்ணகிரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அஞ்செட்டியை தனி ஒன்றியமாக அறிவித்துள்ளார். அதேபோல், மலை கிராமமான குல்லட்டி, தொழுவபெட்டா போன்ற மலை கிராமங்களுக்கு, இதுவரை தார்ச்சாலை வசதி இல்லாமல், மக்கள் தேர்தலை புறக்கணித்து வந்தனர். அப்பகுதியில், 12.50 கோடி ரூபாய் மதிப்பில், சாலை அமைக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓசூரிலுள்ள தளி சாலை ரயில்வே கேட்டில், 90 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். கெலமங்கலத்தில் ஒரு அவுட்டர் ரிங்ரோடு அமைக்கப்படும் என கூறியுள்ளார். இத்திட்டங்களை மக்கள் வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.