/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/'கலெக்டரிடம் மனுக்கள் அளிப்பது வீண்' ; உண்ணாவிரதம் அறிவித்த உழவர் பேரியக்கம்'கலெக்டரிடம் மனுக்கள் அளிப்பது வீண்' ; உண்ணாவிரதம் அறிவித்த உழவர் பேரியக்கம்
'கலெக்டரிடம் மனுக்கள் அளிப்பது வீண்' ; உண்ணாவிரதம் அறிவித்த உழவர் பேரியக்கம்
'கலெக்டரிடம் மனுக்கள் அளிப்பது வீண்' ; உண்ணாவிரதம் அறிவித்த உழவர் பேரியக்கம்
'கலெக்டரிடம் மனுக்கள் அளிப்பது வீண்' ; உண்ணாவிரதம் அறிவித்த உழவர் பேரியக்கம்
ADDED : ஜூலை 15, 2024 11:52 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் வரை மனு அளித்தும், எந்த பிரச்னையும் தீர்க்கப்படவில்லை என்பதால், உண்ணாவிரத்தில் ஈடுபட உள்ளதாக கூறி, சூளகிரி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் சிவருத்ரையா தலைமையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: சூளகிரி வட்டம் தியானதுர்-கத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இல-வச மின் இணைப்புக்கு விண்ணப்பித்து, 30 ஆண்டுகளாக காத்து கிடக்கின்றனர். இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மற்றும் விவசாயிகள் கோரிக்கைகளை வலியு-றுத்தி பல ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். இது குறித்து, சூளகிரி தாசில்தார் அலுவலகம் முதல், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் வரை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உழவர் பேரியக்கம், தமி-ழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து, வரும், 24 ல் சூளகிரியில் பழைய தாலுகா மற்றும் பழைய பி.டி.ஓ., அலு-வலகம் முன், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இது குறித்தும், கலெக்டர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளோம். உண்ணாவிரத்திற்கு, உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் வரதராஜன் தலைமை வகிக்கிறார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.