/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வி.சி., மாவட்ட செயலரை கைது செய்யக்கோரி எஸ்.பி.,யிடம் மனுவி.சி., மாவட்ட செயலரை கைது செய்யக்கோரி எஸ்.பி.,யிடம் மனு
வி.சி., மாவட்ட செயலரை கைது செய்யக்கோரி எஸ்.பி.,யிடம் மனு
வி.சி., மாவட்ட செயலரை கைது செய்யக்கோரி எஸ்.பி.,யிடம் மனு
வி.சி., மாவட்ட செயலரை கைது செய்யக்கோரி எஸ்.பி.,யிடம் மனு
ADDED : ஜூன் 07, 2024 12:23 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, வி.சி., மத்திய மாவட்ட செயலரை கைது செய்ய கோரி, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையில், மாவட்ட செயலர் வினோத் உள்பட, 25க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:வி.சி., கட்சியின் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி துணை செயலராக இருப்பவர் முனிச்சந்திரன். புரட்சி பாரதம் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட செயலராக இருப்பவர் வினோத். இருவரும் ஒரு வாரத்திற்கு முன்பு, பெங்களூருவில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து விட்டு திரும்பிய போது, குருபரப்பள்ளி அருகே அவர்களை வழிமறித்த கும்பல், வி.சி., கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலர் மாதேஷ் துாண்டுதல்படி தாக்கியுள்ளனர்.வி.சி., மாவட்ட செயலர் மாதேஷ், ஒன்றிய செயலர் ரமேஷ் ஆகியோர் வினோத்தை வி.சி., கட்சியில் சேருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் வினோத், புரட்சி பாரதம் கட்சியில் மாவட்ட செயலராக இருப்பதால் மறுத்துள்ளார்.இந்நிலையில் புதியபாரதம் மாவட்ட செயலர் வினோத், லண்டன்பேட்டையை சேர்ந்த வினோத் என்பவரிடம், 30 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக, 64 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அவர் யாருக்கும் அரசு வேலை வாங்கி தரவில்லை. இது குறித்தும் கடந்த பிப்ரவரியில், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லண்டன் பேட்டை வினோத்துக்கு ஆதரவாக வி.சி., மாவட்ட செயலர் மாதேஷ், ஒன்றிய செயலர் ரமேஷ் ஆகியோர் தாக்கியுள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.