/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மருந்து வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற மனுமருந்து வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற மனு
மருந்து வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற மனு
மருந்து வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற மனு
மருந்து வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற மனு
ADDED : ஜன 05, 2024 10:41 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மண்டல தலைவர் ராமசாமி தலைமையில், கலெக்டர் சரயுவிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
சமீப காலமாக தமிழ்நாட்டில் சமூக விரோத கும்பல்களின் செயல்பாடுகள் அதிகரித்து, வணிகர்களிடம் மாமூல் பெறுவது, உணவகங்களில் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் செல்வது, உரிமையாளர்களையும், உணவகங்களையும் தாக்குவது, மருந்து கடைகளில் சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்துவது, விதிமீறல் செய்யாத மருந்து வணிகர்களை கொடூரமாக தாக்குவது, போலீசில் புகார் அளிப்பவர்களை பழிவாங்குவது உள்ளிட்டவை நடக்கிறது. கடந்த டிச., 29 இரவு, 10:00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ஓட்டேரி பகுதியில் கஸ்துாரி மெடிக்கல் உரிமையாளர் வினோத்குமார், 43, என்பவரை ரவுடி கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. இது, அனைத்து வணிகர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ சேவையை பாதுகாப்பது போல், அரசிற்கு வரி வருவாயை ஈட்டித்தரும் வணிகர்களையும், சமூக விராத கும்பல்களிடமிருந்து பாதுகாக்க சிறப்பு சட்டம் ஒன்றை விரைவில் இயற்ற, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், சங்க செயலாளர் ஜெகதாதன், பொருளாளர் வசந்தகுமார், வணிகர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், நகர தலைவர் சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.