/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மக்கள் வேண்டுகோள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மக்கள் வேண்டுகோள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மக்கள் வேண்டுகோள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மக்கள் வேண்டுகோள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மக்கள் வேண்டுகோள்
ADDED : செப் 10, 2025 01:08 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட் டம், காவேரிப்பட்டணம், டவுன் பஞ்., அந்தஸ்தில் உள்ள நகரம். இங்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் மருந்து துறையின் சார்பில், அரசு சமுதாய உடல் நல மையம் இயங்கி வருகிறது. 24 மணி நேர அவசர சிகிச்சை மையமாகவும், பிரசவ சேவைகளும் இங்கு வழங்கப்பட்டு வந்தன.
காவேரிப்பட்டணம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சாலை விபத்துகள் மற்றும் இயற்கைக்கு மாறான இறப்புகள் ஆன உடல்கள் இந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தொடங்கப்பட்ட பிறகு, காவேரிப்பட்டணம் அரசு சமுதாய உடல்நல மையம் தரம் இறக்கப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார மையமாக மாற்றப்பட்டு விட்டது.
ஆனாலும், பல்வேறு நோய்களுக்காக இந்த மருத்துவமனைக்கு, 500க்கும் மேற்பட்டவர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். ஆனாலும், அங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் மட்டுமே இங்கு வழங்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து, 21 கி.மீ., தொலைவில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கே அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதேபோல காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கமும் மிகவும் சேதமாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்ப---------ட்டு வருகிறார்கள். குறிப்பாக கடந்த, 2 ஆண்டுகளாக இங்குள்ள பிரேத பரிசோதனை அறை செயல்படாமல் உள்ளது. எனவே காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.