/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வீடுகளை இழந்த மக்கள் மாற்றிடம் கேட்டு கோரிக்கைவீடுகளை இழந்த மக்கள் மாற்றிடம் கேட்டு கோரிக்கை
வீடுகளை இழந்த மக்கள் மாற்றிடம் கேட்டு கோரிக்கை
வீடுகளை இழந்த மக்கள் மாற்றிடம் கேட்டு கோரிக்கை
வீடுகளை இழந்த மக்கள் மாற்றிடம் கேட்டு கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2025 01:13 AM
கிருஷ்ணகிரி, கெலமங்கலம் அருகே, சாலை விரிவாக்கத்தால் வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்களுக்கு மாற்றிடம் வழங்க, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம்- - ராயக்கோட்டை இடையே சாலை விரிவாக்கம் பணி, கடந்த ஓராண்டுக்கு மேலாக நடக்கிறது. இதனால் சாலையோரம் இருந்த, 100க்கும் மேற்பட்ட புளியமரங்கள் அகற்றப்பட்டன.
அதேபோல் சாலையையொட்டி இருந்த, 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதில் கெலமங்கலத்தில் இருந்து- ராயக்கோட்டை செல்லும் சாலையில், அனுசோனை பகுதியில் இருந்த, 141 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. இவர்களுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதே பகுதியில் பாறைகள் அதிகமுள்ள பகுதியை ஒதுக்கி உள்ளதாகவும், கூலித்தொழிலாளிகளான எங்களால் செலவு செய்து பாறைகளை அகற்றி வீடு கட்ட முடியாது. எனவே, மாற்றிடத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.