/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற வாய்ப்பு பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற வாய்ப்பு
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற வாய்ப்பு
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற வாய்ப்பு
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற வாய்ப்பு
ADDED : ஜூன் 06, 2025 01:10 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 18 வயது முதிர்வு பெற்றும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெறாதவர்கள், சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்பட்டு வரும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், 18 வயது முதிர்வு பெற்றும், முதிர்வு தொகை பெறாதவர்களை கண்டறியும் வகையில், பயனாளிகள் விபரங்கள், krishnagiri.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில், கண்டறியபடாத பயனாளிகள் இருந்தால், அவர்கள், வைப்புத்தொகை ரசீது மற்றும் உரிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சமூக நல அலுவலகத்தையோ அல்லது 04343 235717, 91500 57315 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.