/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குளிர்சாதன வசதியுடன் புதிய நுாலகம் திறப்பு குளிர்சாதன வசதியுடன் புதிய நுாலகம் திறப்பு
குளிர்சாதன வசதியுடன் புதிய நுாலகம் திறப்பு
குளிர்சாதன வசதியுடன் புதிய நுாலகம் திறப்பு
குளிர்சாதன வசதியுடன் புதிய நுாலகம் திறப்பு
ADDED : ஜூன் 13, 2025 01:19 AM
தர்மபுரி, மாரண்டஹள்ளியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய நுாலகத்தை, ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., சண்முகம் திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஹள்ளி டவுன் பஞ்.,ல், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், குளிர்சாதன வசதியுடன் புதிய நுாலகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்து நேற்று நுாலக திறப்பு விழா நடந்தது. பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமை வகித்தார். ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., சண்முகம், நுாலகத்தை திறந்து வைத்து பேசினார்.தர்மபுரி, அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் நாகராசன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.