ADDED : மே 12, 2025 02:42 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை கோட்டம், பாப்பிரெட்டிப்-பட்டியில் இருந்து மின்வாரிய அலுவலகம் வழியாக கோழிமேக்-கனுார், ஜீவா நகர் இணைப்பு சாலை, 2 கி.மீ., துாரம், 4 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடந்தது.
பணியின் தரம் குறித்து சென்னை பாலங்கள் பராமரிப்பு கண்காணிப்பு பொறி-யாளர் சாந்தி, சேலம் தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் நடராஜ், தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் தார் கலவை சரியான அளவில் உள்ளதா? என்பதை உறுதி செய்ய சாலையில் துளை-யிட்டு அளவீடு செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.