Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மரகதாம்பிகை அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

மரகதாம்பிகை அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

மரகதாம்பிகை அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

மரகதாம்பிகை அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

ADDED : ஜன 25, 2024 09:54 AM


Google News
ஓசூர்: ஓசூரில், 1,000 ஆண்டுகள் பழமையான, மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழாவின்போது சந்திர சூடேஸ்வரர் தேர், மரகதாம்பிகை அம்மன் தேர் மற்றும் விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள் தேர் வீதிகளில் வலம் வரும்.

இதில், 257 ஆண்டுகள் ஓடிய பழமையான மரகதாம்பிகை அம்மன் தேர் சேதமடைந்ததால் அதற்கு பதிலாக, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. இந்த தேர், 14 அடி உயரம் மற்றும், 28 டன் எடை கொண்டதாகும். மரகதாம்பிகை அம்மனின் புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

இதையொட்டி, ஓசூர் தேர்ப்பேட்டையிலுள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தேர் கமிட்டி, ஊர் பொதுமக்கள் ஆகியோர் சார்பில் புதிய தேரின் விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து மரகதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தேரில் அமர வைக்கப்பட்டார். அதன் பின் பக்தர்கள், 'அரோகரா அரோகரா' என கோஷங்களை எழுப்பி புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனர். இத்தேரானது தேர்பேட்டையின், 4 ரத வீதிகளிலும் சுற்றி வந்தது. தொடர்ந்து தேர் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

தேர்கமிட்டி தலைவர் மனோகரன் தலைமையில், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மற்றும் ஏராளமானோர் தேரை வடம்

பிடித்து இழுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us