/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 79 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை 79 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
79 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
79 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
79 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
ADDED : ஜூன் 05, 2025 01:02 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேசிய அடையாள அட்டை வழங்க முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாம் புதன் கிழமை நடக்கிறது.
இதில், கை கால் பாதிக்கப்பட்டோர், கண் பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள், மனநலம், மனவளர்ச்சி குன்றியோர் ஆகியோர் கலந்து கொள்ளலாம். அவர்களை சிறப்பு மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொள்வர். அதன்படி இன்று, 79 மாற்றுத் திறானாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், எலும்புமுறிவு மருத்துவர் சபரி, மனநல மருத்துவர் முனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.