/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/6 மாத பெண் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் : ரூ.16 கோடி மருந்துக்காக உதவியை நாடும் பெற்றோர்6 மாத பெண் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் : ரூ.16 கோடி மருந்துக்காக உதவியை நாடும் பெற்றோர்
6 மாத பெண் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் : ரூ.16 கோடி மருந்துக்காக உதவியை நாடும் பெற்றோர்
6 மாத பெண் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் : ரூ.16 கோடி மருந்துக்காக உதவியை நாடும் பெற்றோர்
6 மாத பெண் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் : ரூ.16 கோடி மருந்துக்காக உதவியை நாடும் பெற்றோர்
ADDED : ஜன 28, 2024 03:32 PM
ஓசூர் : ஓசூரில், 6 மாத பெண் குழந்தை, முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16 கோடி ரூபாய் மருந்திற்காக, அரசு மற்றும் மக்களின் உதவியை எதிர்பார்த்து பெற்றோர் காத்துள்ளனர்.சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே எட்டிகுட்டப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 35; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே பிரகாஷ் நகர் மெயின் பகுதியில், வாடகை வீட்டில் தங்கி, பெங்களூரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுகிறார்.
இவர் மனைவி லாவண்யா, 31; இவர்களுக்கு பிரனேஷ்வரன், 7, என்ற மகன் மற்றும் ஷத்விகா என்ற, 6 மாத பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தை கடந்த நவ., மாதம் சளி தொல்லை, மூச்சுத்திணறல் மற்றும் தாய்ப்பால் குடிக்க முடியாமல் அவதிப்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடந்த நவ., 27 ல், பெங்களூரு நாராயணா இருதாலயா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது, குழந்தைக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதை குணமாக்க, அமெரிக்காவிலுள்ள நோவார்டிஸ் என்ற மருந்து நிறுவனத்தில் இருந்து, 16 கோடி ரூபாய்க்கு தடுப்பு மருந்து வரவழைக்க வேண்டும். ஆனால், அதற்கு தேவையான தொகை சக்திவேலிடம் இல்லை. தற்போது குழந்தைக்கு பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனை, ஐ.சி.யு., பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு நாளொன்றுக்கு, 22,000 ரூபாய் வரை செலவாகிறது. இதுவரை மொத்தம், 15 லட்சம் ரூபாய் வரை சக்திவேல் செலவு செய்துள்ளார். கம்பெனி இன்சூரன்ஸ், உறவினர்கள் உதவி, சேமிப்பு என, தன்னிடமிருந்த பணத்தை வைத்து சமாளித்து விட்டார். ஆனால், தற்போது தொடர் சிகிச்சையளிக்கவும், நோய்க்கான தடுப்பு மருந்தை வாங்கவும், சக்திவேலிடம் பணம் இல்லை. இதனால், தமிழக முதல்வர் மற்றும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு, இ-மெயில் மூலம் மனு அனுப்பியுள்ளார். அரசு தரப்பில் இன்னும் உதவி கிடைக்கவில்லை. அதனால், தடுப்பு மருந்தை பெற, மக்களிடம் உதவியை எதிர்பார்த்து, குழந்தையின் பெற்றோர் உள்ளனர்.கூடிய விரைவில் குழந்தை ஷத்விகாவிற்கு தடுப்பு மருந்து செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், இடுப்புக்கு கீழுள்ள பாகங்கள் செயலிழந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள், 88920 10400, 90923 73681 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.