/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சேறு, சகதியான தெரு: குள்ளனுார் மக்கள் அவதி சேறு, சகதியான தெரு: குள்ளனுார் மக்கள் அவதி
சேறு, சகதியான தெரு: குள்ளனுார் மக்கள் அவதி
சேறு, சகதியான தெரு: குள்ளனுார் மக்கள் அவதி
சேறு, சகதியான தெரு: குள்ளனுார் மக்கள் அவதி
ADDED : செப் 16, 2025 01:56 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஞ்., குள்ளனுாரில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மழை பெய்தால், தெருக்களில் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேறும், சகதியுமாக மாறிய மழை நீரை, கடந்துதான் செல்ல வேண்டிய நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் இப்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தர்மபுரி -- திருப்பத்துார் மாநில நெடுஞ்சாலையோரம், ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று, தாசில்தார் அலுவலகம் அருகே, சாலையை கடந்து வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை
பார்வையிட்டு, தேங்கிய மழைநீரை அகற்றுவதுடன், சாலையோரம் செல்லும் கழிவு நீருக்கு கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க, குள்ளனுார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.