Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாவட்டத்தில் 2ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு 180க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பதிவு

மாவட்டத்தில் 2ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு 180க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பதிவு

மாவட்டத்தில் 2ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு 180க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பதிவு

மாவட்டத்தில் 2ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு 180க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பதிவு

ADDED : மார் 17, 2025 03:40 AM


Google News
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த, 2ம் கட்ட பறவைகள் கணக்-கெடுப்பில், 180க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கண்டறியப்-பட்டு பதிவு செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கெலவரப்பள்ளி அணை, கே.ஆர்.பி., அணை உட்பட மொத்தம், 40 நீர்நிலைகளில் கடந்த, 8 மற்றும் 9ல், முதற்கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டன. 2ம் கட்டமாக ஒருங்கிணைந்த நிலப்பரப்புகளில் கடந்த, 2 நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்-ளப்பட்டது.இதில், 30க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், பணியாளர்கள், 70க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவ, மாண-வியர் மற்றும் பறவைகள் பற்றி முன் அனுபவமுள்ள நபர்கள் ஈடு-பட்டனர். வாட்ஸாப் சமூக வலைதளம் மூலம் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு வழி நடத்தப்பட்டனர்.

தொலைநோக்கு கருவி, கேமரா உட்பட பல்வேறு கருவிகளை பயன்படுத்தி, கருந்தலை மாம்பழ குருவி, நீலத்தொண்டை ஈ பிடிப்பான், பருந்துகள், செந்தலை பஞ்சுருட்டான், மீன் கொத்-திகள், காட்டுப்பக்கி குருவி, ஆந்தைகள், கழுகுகள், அரசவால் ஈ பிடிப்பான், தேன்சிட்டு, கதிர் குருவி, புள்ளி ஆந்தை, வல்லுாறு, ஊதா பிட்டு தேன் சிட்டு, கல்லுக்குருவி, கள்ளி புறா, காட்டு பக்கி, ஜெர்டன் புதர் வானம்பாடி, கருஞ்சிட்டு, குக்குறுவான், மாம்பழ சிட்டு, செம்பழுப்பு முதுகு கீச்சான், குடுமி கழுகு உட்-பட, 180க்கும் மேற்பட்ட பறவையினங்கள் அடையாளம் கண்டு உரிய படிவத்தில் பதிவு செய்யப்பட்டன.

கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் சான்றிதழ்களை வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us