/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம்; ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க தீர்மானம்60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம்; ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க தீர்மானம்
60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம்; ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க தீர்மானம்
60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம்; ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க தீர்மானம்
60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம்; ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க தீர்மானம்
ADDED : ஜூலை 15, 2024 12:16 AM
கிருஷ்ணகிரி: தமிழகத்தில், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாத ஓய்வூ-தியம், 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என, விவசாயிகள் தீர்-மானம் நிறைவேற்றினர்.தமிழக நதிகள் இணை ப்பு விவசாயிகள் சங்க, மாநில அவசர பொதுக்குழு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்-டணம் அடுத்த சப்பாணிப்பட்டியில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் கோணப்பன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் ராஜி வரவேற்றார். தர்மபுரி மாவட்ட தலைவர் முனிராஜ் துவக்க உரையாற்றினார். மாநில பொருளாளர் சதா-சிவன் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார். கூட்டத்தில் கடந்த, 2020 - 2021ல் டில்லியில் நடந்த போராட்டத்தால், மத்திய வேளாண் துறை செயலாளர் கடந்த, 2021 டிச., 9ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி மீண்டும் போராட்டம் தொடங்கப்படும். மத்திய அரசு, பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திர-வாதம் தரவேண்டும். தமிழகத்தில், 60 வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாத ஓய்வூதியம், 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகள் தீர்மான-மாக நிறைவேற்றப்பட்டன.